முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செல்ஃபி செல்ஃப்ளை

செல்பீ பிரியர்களுக்காக செல்பி ஸ்டிக்கிற்க்கு பதிலாக மினி ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமரா அறிமுகமாகியுள்ளது. இந்த மினி ட்ரோனுக்கு செல்ஃப்ளை (SELFLY) என பெயரிட்டுள்ளனர். கைகளுக்கு அடக்கமான இந்த மினி ட்ரோனை, நமது ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு உறையிலேயே வைத்து கொள்ள முடியுமாம்.

பேனாவின் மூடியில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

செல்போனே கதி என்று கிடக்கும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பேனா பெரிய அளவில் பழக்கத்தில் இருக்காது. பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். பேனா மூடியை பழக்க தோஷத்தில் கடித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அதை ஏதேச்சையாக விழுங்கி விட்டால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பேனா மூடியை விழுங்கி, அது மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயத்திலும் கூட மூச்சுக்காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த துளை.

அதிசயம் - ஆச்சர்யம்

மெல்போர்ன் நகரில் இருக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். மைன் கூன் வகையை சேர்ந்த ஓமர் என்ற பூனையை வளர்த்து வருகிறார். மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும், ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் உள்ளது.  தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கோமோடோ டிராகன் எனப்படும் பல்லிகள்

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னெஸ்ஸி என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் கோமோடோ டிராகன் எனப்படும் ராட்சத பல்லி இன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் பெண் பல்லிகள் ஆண் துணை இல்லாமலேயே தானே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் மிகவும் அரிதாகவே இவை நடந்ததாக சொல்லப்படுகிறது. 

முதல் நாடு

முதன் முதலில் காகித பணத்தை பயன்படுத்திய நாடு சீனாதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய நவீன காலத்தில், பிளாஸ்டிக்கில் பணத்தை உண்டாக்கிய முதல் நாடு ஆஸ்திரேலியா. காகிதத்தில் இருந்து பிளாஸ்டிக்காக மட்டும் தான் மாற்றம் இருந்ததே தவிர, வேறு எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம்

இன்றைக்கு பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அலுத்துக் கொள்கிறார்கள். தெரு வியாபாரிகள் சிலர் வாங்கக் கூட மறுத்து விடுகின்றனர். புரளி உண்மையை விட வேகமாக பரவுகிறது. இந்நிலையில் 2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால் விரைவில் லட்சாதிபதியாகி விடலாம். இது தொடர்பாக வெளியான செய்தி ஒன்றில் ஓஎல்எக்ஸ் தளத்தில் பழைய 2 ரூபாய் நாணயங்களை, பழங்கால பொருள்கள் சேகரிக்கும் நபர்கள் வாங்குவதாக விளம்பரங்கள் வந்துள்ளன. எனவே இவற்றின் மதிப்பு ரூ. 5லட்சம் வரை கிடைக்குமாம். அதிலும் 1994, 1995, 1997, 2000 அச்சிடப்பட்ட நாணயங்களுக்கு அதிக கிராக்கி. இணையதளத்துக்கு சென்று முறைப்படி பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல விலைக்கு இவற்றை விற்கலாம் என்கின்றன ஊடக செய்திகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago