முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

'டூ இன் ஒன்' விமானம்

நீரிலும், வானிலும் செல்லக் கூடிய வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா தயாரித்து வருகின்றது. இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.AG600 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 37 மீட்டர் மொத்த  நீளமும், 38.8 மீட்டர் நீளமுள்ள இறக்கையையும் கொண்டது. 53.5 டன் சுமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், 20 டன் நீரையும் சுமந்து செல்லும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் 4500 கி.மீ பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானம் வானில் பறக்கும் போது 53 டன் சுமையை தாங்கக் கூடிய சக்தி கொண்டது.

நாசாவை முந்தும்

நாசாவுக்குத் தேவையான விண்கலங்களைத் தயாரித்து வழங்கி வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சந்திரனுக்கு மனிதர்களை அழைத்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 384,400 கிலோ மீட்டர் தூரம் உள்ள சந்திரனுக்கு 2018 -ம் ஆண்டு 2 மனிதர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் கன ராக்கெட் மூலம் அழைத்து செல்கிறதாம்.

விஞ்ஞானி டார்வினின் செல்ல பிராணி

உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து முதன் முதலாக உலகுக்கு புதிய அறிமுகத்தை செய்தவர் சார்லஸ் டார்வின் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது செல்ல பிராணி எது தெரியுமா.. ஆமை தான். தொடக்கத்தில் அது செல்லப்பிராணியாக இல்லை.. கலபகோஸ் தீவுகளுக்கு அவர் சென்ற பிறகு, அதற்கு ஹாரியட் என பெயரிட்டு வளர்த்தார். ஆனால் தனது உரிமையாளரை காட்டிலும் 126 ஆண்டுகள் அந்த ஆமை உயிர் வாழ்ந்தது. அதாவது 176 வயதில் கடந்த 2006 இல் அது உயிரிழந்தது. ஹாரியட்டை இறுதியில் வளர்த்தவர் பிரபல முதலை வேட்டையாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இர்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானம் டெலிவரி

இணைய வர்த்தக சேவையில் முதன்முதலா அமேசான் நிறுவனம், ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து சுமார் 13 நிமிடங்களுக்குள் உரியவரிடம் கொண்டு சேர்க்கப்படும்.பாப்கார்ன் போன்ற மிகவும் எடை குறைவான பொருட்கள் மட்டுமே டிரோன் விமானம் மூலம் டெலிவரி செய்யப்படும். ட்ரோன் மூலம் முதன்முதலில் டிசம்பர் 7 ஆம் தேதி அதன் முதல் விற்பனையை தொடங்கியது. இந்த டிரோன் 400 அடி உயரத்தில் பறந்து செல்லும் திறன் உடையது. வாடிக்கையாளர்களின் டெலிவரி குறித்த ப்ரோக்ராம்மிங் ட்ரோன் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் படி பறந்து சென்று பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்கிறது.

விநோத வழக்கம்

உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யமான ரோம் சாம்ராஜ்யத்தில் பல விநோதமான பழக்கவழக்கங்கள் இருந்தன. துணிகளை துவைக்க, பண்டைய ரோம் நாகரீகத்தில் சிறுநீரை பயன்படுத்தினர். மேலும், பற்களை வெள்ளை ஆக்கவும் ரோமானியர்கள் இதை பயன்படுத்தினர். அழகை மேம்படுத்த பெண்கள், கிளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தினர்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago