முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கருப்பு ஆடைகளை மெருகூட்ட காபி

இதென்ன புதுக்கதையாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட வேண்டாம்... கருப்பு நிற ஆடைகள், அடர் நிற ஆடைகள் நிறம் மங்கி விட்டதா.. கவலை வேண்டாம். இரு கோப்பை காபி போதும்.. காஃபி மேக்கரில் நன்றாக தயார் செய்யப்பட்ட 2 கோப்பை காஃபி டிகாக் ஷனை எடுத்து கொள்ளுங்கள்...வாஷிங் மெஷினில் வெளுத்து பல்லிளிக்கும் அடர் மற்றும் கருப்பு நிற துணிகளை போடுங்கள்.. கூடவே காபி டிகாக் ஷனை சேருங்கள்... அலசும் ஆப்ஷனை ஆன் செய்யுங்கள்... அவ்வளவுதான் வாஷிங் மெஷின் நின்றதும் எடுத்து துணிகளை காயப் போடுங்கள்..புத்தம் புதுசாக இருக்கும்...

விண்வெளியில் தயார் செய்யப்பட்ட ஓர் இசை ஆல்பம் எது தெரியுமா?

ஒரு விண்வெளி வீரருக்கு வித்தியாசமான ஆசை வந்தது. விண்வெளியில் இருக்கும் போதே இசை அமைத்தால் என்ன.. அவ்வாறு இசை அமைத்ததை ஓர் ஆல்பமாக வெளியிட்டால் என்ன... கனடா நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரரான செர்ரிஸ் ஹேட்பீல்டு என்பவர்தான் கடந்த 2015 இல் அப்படி ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 144 நாட்கள் தங்கியிருந்து 11 பாடல்களை அங்கேயே பதிவு செய்தார். Space Sessions: Songs for a Tin Can என்ற பெயரில் அந்த ஆல்பம் வெளியானது. அதே நேரத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரினும் விண்வெளியில் இருந்து ஒரு பாடலை பாடினார். ஆனால் அந்த பாடல் பதிவு செய்யப்படவில்லை. அதுதான் விண்வெளியிலிருந்து பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை சிறுநீரகம்

இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வில்லியம் பி‌ஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கையடக்க வடிவிலான இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.

முட்டை ஆரோக்கியம்

முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் ஆரோக்கியமான ஒன்று. அதை நாம் கொலஸ்ட்ரால், கொழுப்பு என்ற ஒற்றை காரணம் காட்டி தவிர்த்து வருகிறோம். ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் இருக்கின்றன. வைட்டமின்: எ, டி, கே, ஈ. மற்றும் பி மினரல்ஸ்: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ஜின்க்.

மனித முகங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளும் பறவை எது தெரியுமா?

மனிதர்களை அவர்களின் முகங்களை பார்த்தால் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளும் பறவை எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. அது வேறு எதுவும் இல்லை... நாம் அன்றாடம் பார்க்கும் காகம் தான் அது. அது மனிதர்களின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டால் தனது வாழ் நாள் முழுவதும் மறக்காமல் அடையாளம் காணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நம்மால் ஒரு காகத்தை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் நம் முன்னால் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியுமா.. நிச்சயம் முடியாது. அதே போல தன்னுடன் நட்பாக பழகும் மனிதர்களுக்காக அவை பரிசு பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றனவாம்.  என்ன ஓர் ஆச்சரியம் பாருங்கள்.

பண்டைய காலத்தில் கண்ணாடி எவ்வாறு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

பண்டைய காலத்தில் எகிப்தில் கண்ணாடி பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குவார்ட்ஸ் எனும் தனிமத்தை மணலிலிருந்து பிரித்தெடுத்து அதை மரச் சாம்பலுடன் கலந்துள்ளனர். பின்னர் அதை களிமண் கலனின் வைத்து சுமார் 750 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கப்பட்டது. அந்த கலவை உருகி ஒரு பந்து வடிவை அடையும் வரை இந்த செயல்பாடு தொடரும். பின்னர் குளிர்விக்கப்பட்டு, வண்ணம் சேர்க்கப்படும். மீண்டும் மற்றொரு கலனில் அது செலுத்தப்பட்டு இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு குளிர்விக்கப்பட்டதும் கண்ணாடி பெறப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago