முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நவீன கருவி ‘இலி’

மனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட ‌இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன,‌ ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது. இந்தக் கருவியின் சிறப்பு, இதை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்பது மற்றும் 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம்.

அசாமில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா எது தெரியுமா?

தமிழர்களாகிய நமக்கு தை பொங்கல் தான் அறுவடை திருவிழாவாகும்.அசாமில் ‘மாக் பிஹூ’ என்ற பெயரில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து கொண்டாடப்படுதம் இந்த பண்டிகையை, வட மற்றும் மத்திய இந்தியாவில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். மேலும், இந்தியாவில் உள்ள விவசாயிகள், அறுவடை திருநாளாக கொண்டாடுகின்றனர், ஆனால் மாநிலங்களுக்கேற்ப இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டங்கள் மாறுபடும். அதன் ஓர் அங்கமாக மூங்கில், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க தற்காலிக குடிசைகள் அமைப்பது அசாம் மக்களின் தொன்று தொட்ட பழக்கம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படும்.

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

மூட்டுகள் பலப்பட

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.

32 மொழிகளை சரளமாக பேசுபவர்

நமக்கெல்லாம் ஒன்று இரண்டு மொழிகளையே ஒழுங்காக பேசுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் ஒருவர் 32 மொழிகளில் சரளமாக பேசி தள்ளுகிறார். அவர் யார் தெரியுமா.. ஐரோப்பா பாராளுமன்றத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளரான கிரேக்கத்தைச் சேர்ந்த Ioannis Ikonomou ஆவார். தொடக்கத்தில் புரூசெல்ஸ் நகரில் மொழிபெயர்ப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெங்காளி, ஸ்வாஹிலி, துருக்கி என 32 மொழிகளில் வெளுத்து கட்டுகிறார்.

மணல், sand

பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா..  கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்த படி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago