முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பார்வை பத்திரம்

நாம் ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடும்போது நமது கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி கண்கள் உலர்கிறது. இதனால், கண்களில் தண்ணீர் உற்பத்தி தடைபட்டு உலர் கண் நோய்கள், கண் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் கண் பார்வை முற்றிலும் பறிபோகுமாம்.

வெள்ளத்தில் மூழ்கியும் அணையாமல் தீபம் எரியும் கோயில்

நாமக்கல் மாவட்டம்  மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.

இனி தண்ணீரை குடிக்க வேண்டாம் - அப்படியே மென்று சாப்பிடலாம்

எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையே நல்ல தண்ணீரை பகிர்ந்து கொள்வதில்தான் மிகப்பெரிய சவால்கள் அடங்கியுள்ளதாக அடிக்கடி சூழலியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரால் நமக்கு பயன் என்றாலும் பாவம் பூமி பந்து படாத பாடு படுகிறது. தற்போது அதற்கு முடிவு கட்ட வந்து விட்டது Ooho water.  லண்டனை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற ஆய்வகம் கடற்பாசி மற்றும் தாவரங்களை பயன்படுத்தி திட வடிவிலான தண்ணீரை கண்டுபிடித்துள்ளது. இதனால் தண்ணீரை பாட்டிலில் அடைக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் தாகம் எடுக்கும் போது இதை அப்படியே எடுத்து மெல்ல வேண்டியதுதான். பார்ப்பதற்கு நிறமற்ற நம்மூர் ஜவ்வுமிட்டாய் போல காணப்படும் இந்த Ooho வாட்டர் வாயில் போட்டதும் அப்படியே கல்கண்டாய் கரைந்து விடுகிறது. இயற்கையான முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

பறக்கும் பைக்

ஹோவர் பைக் எனப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்கோர்பியன் 3 ஹோவர் பைக் என்று பெயரிடப்பட்டுள்ள இது, மின்சாரம் மூலம் இயங்குகிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹோவர் பைக்கானது தரையில் இருந்து 33 அடி உயரத்தில் மணிக்கு 30 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும்.

தினமும் ஒரு கோப்பை தேநீர்

இன்றைய நவீன யுகத்தில் நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. இரணாடம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பிளாக் டீ குடியுங்கள் இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரை நோய் மற்றும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவும்.

இன்ஸ்டன்ட் டீ பேக் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா?

பெரும் பாலும் ரயில் பயணங்களின் போது தேநீர் விரும்பிகளுக்கு கிடைக்கக் கூடிய அனுபவம்தான் இன்ஸ்டன்ட் டீ பேக். உடனடி தேயிலை பொட்டலம். சூடான நீரில் அல்லது பாலில் அதை அமிழ்த்தியவுடன் சுடச்சுட தேநீர் தயார். இது எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா... அதுவும் மிகவும் தற்செயலாகத் தான் இது வடிவமைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..1908 இல் நியூயார்க் நகரைச் சேர்ந்த தேயிலை வியாபாரி தாமஸ் சுல்லிவன் என்பவர் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு சிறிய சிலிக்கன் பைகளில் தேநீரை பார்சலாக அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை பெற்ற வாடிக்கையாளர்கள் அதை பிரிக்காமல் அப்படியே சூடான நீர் அல்லது பாலில் கலக்க வேண்டும் என்று கருதி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க வைத்து பருகியுள்ளனர். இது சிறப்பாக இருப்பதாகவும் அவருக்கு கடிதமும் எழுதினர். பிறகென்ன அவரது பிசினஸ் மூளை இதை சிக்கென பிடித்துக் கொண்டு குட்டி குட்டி இன்ஸ்டன்ட் டீ பேக்குகளை வடிவமைத்து பேடன்ட் உரிமை பெற்று விற்கத் தொடங்கி... தற்போது நம்மூர் ரயில் நிலையம் வரையிலும் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago