முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விரைவில் பேச

குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை உடனடியாக பேச வைக்க, குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டுமாம். இதன்மூலம், குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும். நல்ல சங்கீதம் மற்றும் பாடல்களை கேட்க செய்வதன் மூலமும் அவர்கள் விரைவில் பேச கற்று கொள்கிறார்களாம்.

முதல் முதல்வர்

நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா விருது. இந்த விருதினை பெற்ற முதல் இந்திய, முதல்வர் என்ற பெருமை நமது தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜிக்கு சேரும். இவர் பக்தி பாடலை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த பாடல் குறையொன்றும் இல்லை  மறை மூர்த்தி கண்ணா என்பதாகும்.

வரிக்குதிரையை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

உடலில் கருப்பு வெள்ளை கோடுகளை கொண்டுள்ளதால் இதை வரிக்குதிரை என்கிறார்கள். இவை சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழும் பாலூட்டிகள். மனிதர்களுக்கு கை ரேகை போல இவற்றுக்கு வரிக்கோடுகள் ஒவ்வொரு குதிரைக்கும் மாறுபட்டே காணப்படும். இவை நின்றபடியே உறங்கக் கூடியவை. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தை சாய்த்தபடி நின்று தூங்கும். சுமார் 2 மீ உயரம், 3 மீட்டர் நீளம், 250 முதல் 500 கிலோ எடையுடையதாக இவை காணப்படும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் ஓடும். நாள் ஒன்றுக்கு சுமார் 80 கிமீ வரை நடக்கும். இவை கூட்டமாகத்தான் வாழும். இவற்றை தனியே பார்க்க இயலாது. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் வரிக்குதிரையை பழக்க முடியாது என்பதுதான். அதற்கான பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் ஆச்சரியமானது தானே...

வயது தடையில்லை

ஹெலன் வேன் விங்கிள் என்ற 87 வயதான மூதாட்டி, ‘பாடி விங்கிள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.இவர் கணக்கு தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்ஸ், ட்விட்டரில் 2 லட்சத்து 20 ஆயிரம் பாலோவர்ஸும் உள்ளனர். நடிகை கர்தாஷியன் உடன் இவர் சேர்ந்து இருக்கும் போட்டோவிற்கு 88.3K லைக்குகள் கிடைத்ததாம்.

அமேசான் காட்டில் 12, 500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு

அமேசான் காடுகள் அதிசயங்களுக்கும், மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் குறைவில்லாத மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். உலகின் மிகப் பெரிய வனப்பகுதியுமாகும். இந்த வனத்தின் அனைத்து ஆச்சரியங்களும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் இதன் பிரம்மாண்டத்துக்கு ஓர் சாட்சி. இந்நிலையில் தெற்கு கொலம்பியாவில்  Chiribiquete National Park என்ற இடத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சுமார் 8 மைல் நீளமுள்ள பாறைத் தொடரில்தான் பழங்கால ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டு முதன் முதலில் உலகுக்கு தெரிய வந்த போதிலும் அந்த இடத்துக்கு செல்வது அத்தனை எளிதானதாக இல்லை. அண்மையில் அங்கு சென்ற கொலம்பிய- பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு தொல்லியல் ஆய்வு குழுவினர் மிகக் கடினமான மலையேற்றத்துக்கு பின்னர்தான் அப்பகுதியை அடைந்தனர். அங்கு வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சுமார் 12 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் பழமையானவையாக இருக்கலாம் என்கின்றனர். அவற்றில் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன என பல்வேறு பட்ட உருவங்கள் வரையப்பட்டுள்ளன.  இது வரை இப்படி ஒரு பாறை ஓவியம் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பது இதன் கூடுதல் ஆச்சரியமாகும்.

கவனம் தேவை

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம்.  சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago