முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

.-6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி

புதுச்சேரியில் உள்ள வாதானூர் கிராமத்தில் பசு ஒன்று அதிசய கன்றை ஈன்றுள்ளது. இதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். வாதானூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயப்பிரகாஷ். அவர் தனது வீட்டில் 5 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.   அதில் பசு மாடு ஒன்று அண்மையில் காளை கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த கன்று வழக்கத்துக்கு மாறாக 6 கால்களுடன் பிறந்துள்ளது. இதையடுத்து சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய கன்றை வந்து பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர்.  -

புதிய ஆப்

இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய  ‘மை ஷேக்’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

3Dபிரிண்டர் மூலம் எருது இறைச்சி ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்

இன்றைக்கு வெகு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் 3D பிரிண்டர் துறையும் ஒன்று. ஒரு பொருளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் அப்படியே ஒட்டு மொத்தமாக உருவாக்க உதவும் கருவியை 3டி பிரிண்டர் என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த 3டி பிரிண்டர் மூலம் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு வரும் வேளையில் முக்கியமாக ஜப்பானைச் சோ்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செயற்கையாக எருது இறைச்சியை உருவாக்கி அசத்தியுள்ளனர். செயற்கை ரத்தம், தசை, திசு, போன்ற சிக்கலான அமைப்புடன் கூடிய இந்த இறைச்சி உருவாக்கம் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாக நிகழ்ந்துள்ளது. Wagyu cows என்று அழைக்கப்படும் பசுமாடுகளின் ஸ்டெம் செல்லிலிருந்து இது போன்ற செயற்கை இறைச்சியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இறைச்சி 5 மீமி அகலம் 10 மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. இதில் 72 பைபர்களை இணைத்து 42 திசுக்களாக உருமாற்றி, மேலும் 28 கொழுப்பு கொண்ட திசுக்களையும், 2 ரத்த தமனிகளையும் உருவாக்கியுள்ளனர். இவை அப்படியே இயற்கை இறைச்சியை போலவே காட்சியளிக்கின்றன. இது குறித்து இக்குழுவின் தலைவர் டாங் ஹீ கங் கூறுகையில், வாக்யூ மாட்டிறைச்சியின் திசுக்களின் கூட்டமைப்பை வரைபடமாகக் கொண்டு தசைநார்கள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்பை 3டி பிரிண்டரை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றார். இவ்வகை மாட்டிறைச்சிக்கு உலக சந்தையில் உணவு பிரியர்களிடம் ஏக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றை கண்ணை திறந்து வைத்து உறங்கும் உயிரினம் எது தெரியுமா?

கடல் வாழ் உயிரினங்களிலேயே மனிதர்களுடன் மிகவும் நட்பாகவும், உறங்கும் போது ஒரு கண்ணை மூடி, ஒரு கண்ணை திறந்து வைத்து கொண்டிருக்கும் அந்த விலங்கினம்... நிச்சயமாக அது டால்பின்கள்தான் என்பது சொல்லாமலேயே தெரிந்திருக்கும்...எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், மூளையின் ஆற்றலை பாதுகாக்கவும் டால்பின்கள் இவ்வாறு ஒரு கண்ணை திறந்து வைத்துக் கொண்டு உறங்குவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதன் மூலம் அரைத் தூக்கம், அரை விழிப்பு என்ற நிலையில் எப்போது டால்பின்கள் உஷராக இருக்கின்றன... என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

புதிய உடை

கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உடையவர்கள் அணிந்து கொள்ளக்கூடிய சிறப்பு டி-சர்ட் உடையை உருவாக்கி உள்ளனர். இதை அணிந்து கொண்டால் சுவாச நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் கண்டுபிடித்து எச்சரிக்கும். டிசர்ட்டின் மேல் உள்ள கண்ணாடி இழையால் ஆன சிறிய ஆண்டனா சென்சாராகவும், கடத்தியாகவும் செயல்படுமாம்.

உடலில் பதித்துக் கொள்ளும் மைக்ரோ சிப்

நவீன தொழில் நுட்பம் மனித இயல்பையே புதிய திசையை நோக்கி மாற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக மைக்ரோ சிப் டெக்னாலஜி தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக மாறி வருகிறது. மேலும் இந்த தொழில் நுட்பம் தறபோதைய பெருந்தொற்று கால கட்டத்தில் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தங்களது தனித்தன்மையை பாதுகாக்கவும் மிகவும் உதவி வருவதாக இதை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சுவீடனில் வசிக்கும் பொது மக்களில் சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்களது அடையாள அட்டையை மைக்ரோ சிப்பாக மாற்றி தங்களது தோலுக்கு கீழே பதித்துக் கொண்டு வருகின்றனர். ஒரு தொழில் நுட்பம் எதிர்கால சந்ததியை எவ்வாறு மாற்றப் போகிறது என்பதற்கு சாட்சியாக இந்த உடலுக்குள் பதித்துக் கொள்ளும் மைக்ரோ சிப் நடைமுறைகள் மாறி வருகின்றன. முன்பு அறிவியல் புனைவு திரைப்படங்களில் மட்டுமே கண்டு வந்த இது போன்ற சம்பவங்கள் நிஜமாகி வருகின்றன. இதில் இன்னும் சிலர் இந்த உடலில் பதித்த மைக்ரோ சிப் மூலம் ரயில் பயண சீட்டு, கிரெடிட் கார்டுகள், வீட்டில் மின் சாதனங்கள் அவ்வளவு ஏன் கதவை கூட இது போன்ற உடலில் பதித்த மைக்ரோ சிப் மூலம் திறந்து மூடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த தொழில் நுட்பம இந்திய நகரங்களை எட்டுவது வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago