முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

நுண்ணோக்கியை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா

ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட முதலாவது நுண்ணோக்கியைக் கண்டவர் இவரே. மிக நுட்பமான பொருட்களையும் பல்லாயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் திறன் வாய்ந்த நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன. தாவரத்தின் உயிரணுக்கள் (plant cell) போன்றவற்றை நுண்ணோக்கியின் துணையின்றிக் காண இயலாது என்பதை நாம் அறிவோம்.

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணை தெரியுமா. அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யா நாட்டின் இகதி எனும் சிறிய ஊரில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1 இல்  பிறந்தவர் வங்காரி மாத்தாய். பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலில் இவர் படித்து அமெரிக்காவில் பட்டம் பெற்றார். மேலும் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். நைரோபி பல்கலையில் பேராசிரியரானார். முதல் பெண் பேராசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தனது நாட்டில் இயற்கை வளத்தை காப்பதற்காக பசுமை பட்டை இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்களை நட முயற்சி மேற்கொண்டார். இயற்கை, சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பெண்கள் கல்வி, ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இவரது இயக்கம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இவரது போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவருக்கு கிடைத்த செல்வாக்கால் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகித்தார். இயற்கை வளத்தை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

ஒரே சமயத்தில் குட் மார்னிங்கும் குட் நைட்டும் சொல்லும் நாடு

அமெரிக்காவில் பகல் என்றால் இங்கு நமக்கு இரவு. இது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் ஒரே நாட்டில் ஒரு பகுதியில் பகல், மறு பகுதியில் இரவு எந்த நாடு தெரியுமா... அது தற்போது உக்ரைனை போட்டு தாக்கிக் கொண்டிருக்கும் ரஷ்யாவில் தான். உலகம் முழுவதும் மொத்தம் 24 சர்வதேச நேர மண்டலங்கள் உள்ளன. அவற்றில் 11 மண்டலங்கள் மட்டும் ரஷ்யாவிலேயே அமைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு பகுதியில் ஒருவர் குட்மார்னிங் சொல்லும் அதே வேளையில் மற்றொரு பகுதியில் மற்றொருவர் குட் நைட் சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தி உறங்க தயாராகிக் கொண்டிருப்பார் என்றால் ஆச்சரியம் தானே..

சீட் வால்ட்

வடக்கு நார்வே ஆர்டிக் கடல் அருகே ஸ்பிட்ஸ்பெர்கன் எனும் இடத்தில் ஸ்வல்பார்ட் குளோபல் சீட் வால்ட் எனும் உலக விதை வங்கி உள்ளது. உலகில் இயற்கை சீற்றங்கள், போர் காலம் போன்ற நேரங்களில் அழிவு ஏற்பட்டால், இங்கு சேமித்து வைத்திருக்கும் விதைகள் மூலம், அதை சீர் செய்துவிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago