முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நிலக்கடலை பட்டரில் இருந்து வைரம் தயாரிக்கலாம் தெரியுமா?

பூமியின் கீழ் மட்டத்தில் உள்ள அழுத்தம் குறித்த மாதிரிகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கி பரிசோதித்தனர். அப்போது பூமியின் கீழே 2,900 கிமீ ஆழத்தில் வளிமண்டலத்தை காட்டிலும் 1.3 மில்லியன் மடங்கு அதிக அழுத்தம் உருவாக்க முடியும் என கண்டறியப்பட்டது. அது மட்டுமின்றி இதன் மூலம் வைரங்களை உருவாக்குவதற்கான புதிய வழிகளும் தெரிய வந்தன. அறிவியல் கோட்பாட்டின்படி அதிகமான அழுத்தத்தில் கார்பன் அணுக்கள் வைரங்களாகின்றன. இந்த சோதனையின் போது நிலக்கடலை பட்டர் (வெண்ணெய்யை) பரிசோதித்த போது அதிலிருந்தும் வைரம் தயாரிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

ஜெர்மன் சர்க்கஸ் கம்பெனியில் நிஜ விலங்குகளுக்கு பதிலாக ஹோலோகிராம் உருவங்கள்

தற்காலத்தில் உலகம் முழுவதும் மிருகவதைக்கு எதிரான விழிப்புணர்வும், கோஷங்களும் பெருகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மிருகங்களை அடித்து வதைத்து பழக்கி அவற்றை சாகசம் செய்வதற்கு பல்வேறு நாடுகளிலும் கடுமையான தடை சட்டங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நவீன யுகம் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழியை கண்டுபிடித்து தந்து விடுகிறது. தற்போது புதிய தொழில் நுட்பமான ஹோலோகிராம் தொழில் நுட்பம் இதற்கும் கை கொடுக்கிறது. அசலான மிருகங்களுக்கு பதிலாக ஹோலோ கிராம் உருவங்களை அசலான மிருகங்களை போலவே உருவாக்கிர அவற்றை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்ய ஜெர்மனி சர்க்கஸ் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அங்கு 2018 முதல் விலங்குகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹோலோகிராம் 3டியில் குதிரை, மீன்கள், யானை உருவங்களை அசல் விலங்குகளுக்கு பதிலாக பயன்படுத்தி கூட்டத்தை ஈர்த்து வருகிறது.

ஆராரோ... ஆராரோ...

தூக்கம் வராமல் தவிப்போருக்கு தீர்வாக இப்போது ரோபோ தலையணை வந்துள்ளது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மூச்சுவிடுவதை சீராகக் கண்காணித்து, தூக்கத்தை சீராக்குகிறது. மேலும் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான, ஆழமான தூக்கம் வர செய்யும். பாதியில் எழுந்தால்கூட இந்த தலையணை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதுதான் ஆச்சரியம்.

மூளை சுறுசுறுப்பாக இருக்க 6 வழிகள்

மூளையை தினந்தோறும் சுறுப்பாக வைத்திருக்க 6 வழிகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்க, அதிக ஈடுபாடுடன் செயல்பட புதிர்களை விடுவிப்பது அவசியம். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள் ஆகும். எனவே, பெரும்பாலான தொழில்முனைவோரின் வெற்றிக்கு, இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மார்க் கியூபன் ஆகியோர் புத்தக படிப்பில் வெற்றி பெற்றவர்கள்.இதுகுறித்து பஃபெட் கூறும்போது, “ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 பக்கங்களைப் படியுங்கள்” இது கூட்டு வட்டி போன்றது என்று அவர் பல கையேடுகள் மற்றும் ஆவணங்களை சுட்டிக்காட்டினார். மேலும், அவர் “அறிவு வளர மற்றும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட புத்தகங்களை படிப்பது நல்லது” என்றார். படிப்பது என்ற செயல்முறை  மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல்  இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது. மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்.ஏராளமான புதிய நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கவலைகள் இருக்கக் கூடாது. மன  அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும்  புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம். ஓர் இசையைக் கற்றுக் கொள்ளும் போதும், உடற்பயிற்சி  மேற்கொள்ளும் போதும் மன அழுத்தம் குறைகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது என்கின்றனர்.

சூரியனால் ஆபத்து

இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன், தீவிரமடைந்து 100 மடங்கு பெரிதாகி ‘சிவப்பு இராட்சதன்’ என்ற நிலையை அடையவுள்ளது. உயிர்களை சுட்டு பொசுக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் சூரியனால்  பூமியின் அழிவு நிச்சயம். மேலும் புதன், வெள்ளி போன்ற கிரகங்கள் அழியும் ஆபத்தும் உள்ளதாம்.

விருச்சிகாசனம்

விருச்சிகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். கை, கால்கள் வலிமையடையும். மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அனைத்துச் சுரப்பிகளும் சீராக இயங்க உதவுகிறது. இதனால் கண் பார்வை கூர்மையடையும். தொடர்ந்து செய்து வந்தால் இழந்த சக்தியை மீட்க முடியும். மேலும், உடலின் சோர்வை போக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago