முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொம்புக்காக வேட்டை

காண்டா மிருகம் வேகமாக அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் இருக்கிறது. அதன் கொம்புகள்தான். சீனாவிலும்,  வியட்நாமிலும் காண்டா மிருகத்தின் கொம்புக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஒரு கிலோ காண்டா மிருக கொம்பின் விலை ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட  அதிகம். இந்த கொம்பு ஆண்மையை அதிகரிப்பதாகவும், புற்றுநோயை தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் அது அதிகம் கொல்லப்படுகிறது.உண்மையில் இதன் கொம்பில் ஆண்மைக்கான சமாச்சாரம் எதுவும் இருக்கிறதா என்றால் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை. நமது நகத்திலும், காண்டா மிருக கொம்பிலும் ஒரே வகையான மூலப்பொருட்கள் தான் உள்ளன.

வறட்டு இருமலுக்கு…

மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

தமிழில் ஸ்கைப்

குறைந்த அளவு இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையிலான ஸ்கைப் லைட் செயலியை இந்திய பயனாளர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த செயலி, குறைவான இணைய வேகம் கொண்ட மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்கைப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்கைப் லைட் செயலியின் செட்டிங்ஸ் உள்ளிட்டவைகளை ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கையாள முடியும் என்ற நிலை மாறி, பிராந்திய மொழிகளிலேயே அந்த செயலியைக் கையாள முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படங்களுக்கு மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. முதன்முதலில் 1929 இல் மே 16 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே விருதில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூடி முத்திரையிடப்ப்டு சீல் வைக்கப்பட்ட கவரில் வெற்றி பெறுபவரின் பெயரை அறிவிக்கும் வழக்கம் 1941 இல் தான் தொடங்கியது. 1940க்கு முன்பு வரை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெற்றியாளர்களை அதன் மாலை பதிப்பில் முந்தைய நாளே அறிவித்துவிடுவதன் காரணமாகவே, 1941 இல் முத்திரையிடப்பட்ட கவர் முறை தொடங்கியது.

குளிர் நல்லது

டிசம்பர் மாதத்தில் உடலை உலுக்கும் குளிர் காற்று சில்லென்று ஊடுருவும்.  இந்த குளிர் காற்றில் உடலுக்கும், மூளைக்கும் தேவைப்படும்  ஆக்சிஜன் அதிக அளவில் உள்ளது.இந்த  ஆக்சிஜனை  மக்கள் அதிக அளவில் பெற வேண்டும் என்பதற்காகவே  மார்கழியில் வீட்டு வாசலில் கோலம் போடும் கலாச்சாரமும்,  கோவில்களில் அதிகாலை பூஜைகளும் மார்கழியில்  கடைபிடிக்கப்படுகின்றன.

ஆயுட்காலத்தை அதிகரிக்கும்

குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்லது. சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்ததில், குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் 1911-லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை பரிசோதித்ததில் குழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆண்-பெண்கள் இடையேயான ஆயுட்கால இடைவெளி அவர்களின் 60வது வயதில், ஆண்களுக்கு 2 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago