முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விநோத திருமணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.  இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த  2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

உயரம் - குட்டை

குட்டையானவர்களை விட உயரமானவர்களுக்கு 25 சதவீதம் தான் இதய பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதாகவும், உயரமானவர்களது இதய ஆரோக்கியம், குட்டையானவர்களை விட சற்று சிறந்தும் இருக்குமாம். ஆனால், புற்றுநோய் ஆபத்து குட்டையானவர்களுக்கு மிகவும் குறைவு. ஆனால் உயரமானவர்களுக்கு குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளதாம். குட்டையாக இருப்பதன் மற்றொரு நன்மை, இத்தகையவர்களுக்கு இரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் பக்கவாதம் வரும் அபாயம் இல்லை. ஆனால் உயரமானவர்களுக்கு இரத்த உறைவு காரணமாக பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வினோத மக்கள்

இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர்.

தனிமை கொல்லும்

சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் எனக்கென்று யாரும் இல்லை. எனக்கென்று நண்பர்கள் இல்லை. எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என புலம்பித் தள்ளுவார்கள். இப்படிப்பட்டவர்களைத் தனிமை உணர்வு கொல்லும். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை சேர்ந்த 2000 இளம் வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிருக்கின்றனர். அதில் தனிமையை உணர்வதாக கூறுபவர்களுக்கு, மற்றவர்களை விட 24 சதவிகிதம் வரை தூக்கம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் தனிமையை உணர்வதாக கூறுபவர்கள், தங்களால் எந்த செயலிலும் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், நான் முழுக்க சோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறு மூளையுடைய மனிதன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அழகை மேம்படுத்தும்

பார்வைத்திறன் மேம்படவும், அழகுக்காகவும், கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர். இதை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணிவதே நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago