முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பயணிகள் செல்லாம்

பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய வகையில் ஓட்டுனரில்லா தானியங்கி ஹெலிகாப்டர் (ட்ரோன்)- ஐ அறிமுகபடுத்த உள்ளது. இந்த ஓட்டுனர் இல்லா தானியங்கி விமானத்தில் சரக்குப் பொருட்கள் அல்லது பயணிகள் பயணிக்கலாம். 1,500 கிலோ (1.5 டன்) எடைய உடைய இந்த விமானம் 500 கிலோ எடை கொண்டயைஏற்றிச் செல்லும் திறனுடையது.

புதிய பாதுகாப்பு

இந்திய பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த புதிய அம்சங்களின் மூலம், சமூகவலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது. படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. படத்தைச் சுற்றிலும் நீல பார்டர் மற்றும் ஒரு வளையம் தோன்றும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி எப்போது தொடங்கப்பட்டது

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஜோசையா சைல்ட். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ். அதை தொடர்ந்து 1688 செப்டம்பர் 29ஆம் தேதி மன்னரின் ஆணை அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர். நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.

ஆண் மயில்கள் தோகை விரித்தாடுவது ஏன் தெரியுமா?

ஆண் மயில், தோகையை விரித்தாடுவது பெண் மயிலைக் கவர்வதற்கே. ஆண் மயில்கள் ஒளிவீசும் வண்ணங்களோடு கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டு விளங்குபவை. ஆண்மயிலின் மிகக் கவர்ச்சியான உறுப்பாக விளங்குவது அதன் நீண்டு வளர்ந்த தோகையே ஆகும். ஒரு ஆண் மயிலின் நீளம் 7 அடி இருக்குமானால் அதன் தோகை மட்டுமே 3 அடி நீளம் வரை இருக்கும். இதன் வால் பகுதி நீலம், பச்சை மற்றும் பொன் நிறங்களின் கலவையாக விளங்கும். ஆங்காங்கே அமைந்துள்ள ‘கண்கள்’ போன்ற பகுதிகள் வண்ணத்தில் மாற்றத்தை உண்டாக்கக் காரணமாக அமைந்துள்ளன. மயில் தன் குட்டையான வால் பகுதியிலுள்ள நீண்ட இறகுகளை அதாவது தோகைகளை உயர்த்தி விரித்து ஆடும்போது மிக அழகாகக் காட்சியளிக்கும். பழங்காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆண் மயிலைப் புனிதமான உயிரினமாகக் கருதி வழிபட்டு வந்தனர்; இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவ்வாறே என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. 

இதுதான் காரணம்

கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.

எல்லாம் வல்ல சித்தர்

ஈசன் வழக்கம்போல் தன் திருவிளையாடல்களைக் காட்ட மாறுவேடம் பூண்டு எல்லாம் வல்ல சித்தராக மதுரைக்கு வந்தார். அப்போது மதுரையை ஆண்டவர் மன்னர் அபிஷேகப் பாண்டியன். இப்படி ஒரு சித்தரைப் பற்றி அறிந்ததும் அவரை சந்திக்க ஓடோடி சென்று, அவரின் பலத்தை சோதிக்கவேண்டும் என்று கூறி, சிலையாக இருந்த யானையை கரும்பு சாப்பிட வைத்து உங்கள் வல்லமையை நிரூபியுங்கள் என்றாராம். உடனே கல் யானை கரும்பை திண்றது. உடனே சித்தரின் மகிமையை புரிந்த மன்னர் மன்னிப்பு கேட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகில்தான் இந்த ‘எல்லாம் வல்ல சித்தர்' சன்னிதி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago