முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறுநீரகத்தை பாதுகாக்க

இரண்டு டீஸ் பூன் மல்லி விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறு நாள் காலை அதனை வடிகட்டி குடிக்க சிறுநீரில்  உள்ள  பாதிக்கப்பட்ட செல்கள் அழியும். வெள்ளக்கரிக்காய் ஜூஸை தினமும் இருவேளை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறி, உடலை  குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

ஸ்மார்ட் போன்

பேட்டரி என்பது ஒரு ரப்பர் போன்றது. அதனால் எவ்வளவு இழுவை தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும் தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின் அறுந்து விடும்.  இதே போல தான் பேட்டரியும் தனக்கான சார்ஜ் ஆகும் நேரம் குறைத்து வடிவமைக்கும் போது அது வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதன் முதலாக சட்டம் எங்கு இயற்றப்பட்டது

மெசபடோமியா நாகரிகம் நாம் அனைவரும் நன்கு அறிந்த பண்டைய கால நாகரிகங்களில் ஒன்றாகும். அங்குதான் பழங்கால பாபிலோன் என்ற நகரம் சுமார் கிமு 2300களில் நிறுவப்பட்டது. இந்நகரை மிகவும் புகழ் பெற்ற அரசனான கிங் ஹம்முராபி என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன்தான் மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டங்களை வகுத்தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த பாபிலோன் நகரம் தொங்கும் தோட்டங்களுக்காக மிகவும் புகழ் பெற்றது. அது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

செயற்கை நாக்கு

ஜெர்மனியில் உள்ள ஹெய்டெல் பெர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் போலி விஸ்கியை கண்டுபிடிக்க முடியும். செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இந்த நாக்கின் மூலம் விஸ்கியின் தரம், பிராண்டு மற்றும் அது தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் தயாரிக்கப்பட்ட காலம் போன்றவற்றைம் அறிய முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்