முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

84 வயது மூதாட்டி விமானம் ஓட்டி சாதனை

பர்க்கின்சன் நோய் உண்டானவர்களுக்கு மற்றவர்களைப் போல் அவர்கள் செய்யும் காரியங்களை வேகமாகவும், இயல்பாகவும் செய்ய இயலாது. பிறரின் உதவியுடன்தான் செய்ய வேண்டியிருக்கும். நம்மூர் அப்பத்தாக்களையும், அம்மாச்சிக்களையும் நாம் அவ்வாறு கண்டிருக்கிறோம். அது போன்ற 84 வயது பர்க்கின்சன்னால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு விபரீத ஆசை வந்து விட்டது. அந்த வயதிலும் விமானம் ஓட்ட வேண்டும் என்பதுதான் அது. அமெரிக்காவைச் சேர்ந்த Myrta Gage என்ற 84 வயது மூதாட்டிதான் அவர். அவர் முன்னாள் விமான பைலட் என்பது கூடுதல் சுவாரசியம். எனவே அந்த வயதிலும் தன்னம்பிக்கை தளராமல் விமானத்தில் ஏறி விட்டார். நம்மூராக இருந்தால் விமான நிலைய வாசல் பக்கம் கூட அண்ட விட அனுமதித்திருக்க மாட்டோம்.  அவரது மகன் Earl தனது தாயார் விமானம் ஓட்டும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.Cody Mattiello என்ற விமானியை தொடர்பு கொண்டு  Earl தனது தாயாரின் ஆசையை தெரிவித்துள்ளார். அவரது உதவியுடன் Lake Winnipesaukee மற்றும் Mount Kearsarge ஆகிய பகுதியில்  Myrta Gage விமானத்தை ஓட்டி அசத்தியுள்ளார். தள்ளாத வயதிலும் தளராம் விமானம் பெண் விமானம் ஓட்டும் அவருக்கு பாராட்டுகள் குவின்றன.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொழுப்பை கரைக்க

தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரும்.

தமிழனின் துரதிஷ்டம்

14 வயதிலேயே மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கி பிரமிக்க வைத்தவர் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை. இவருக்கு ஆகஸ்ட் 30,1982-ல் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுப்பிடித்தவர் என காப்புரிமை அளித்தும் மாடர்ன் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனைக்குரியது.

குண்டு குழந்தை

குண்டாக இருக்கும் குழந்தைகள் தான், ஆரோக்கியமான குழந்தைகள் என நினைப்பது தவறு. குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், எடை அதிகரிக்காது. தாய்ப்பால் மட்டும் கொடுத்து, 10 கிலோ எடை இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஆபத்தை எதிர்நோக்கி...

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் 19-32 வயதுக்குட்பட்ட 2,000த்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுதினால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்