முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் பல்பு

சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. தற்போது சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. விலையும் மிகவும் குறைவுதான். ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பிறகென்ன வீட்டில் எங்கு தேவையோ வாங்கி மாட்டுங்கள்.. இனி திருடன் உங்களிடம் வாலாட்ட முடியாது..

இயற்கை முறையில்

நெதர்லாந்தில் குளிர்சாதனத்துக்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி அமைத்து உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த குளிர்சாதனப் பெட்டிக்கு மின்சாரம் தேவையில்லை. இதில் சேமிக்கப்படும் உணவை உண்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம .

கவனம் தேவை

சிறுவயதில் குழந்தைகள் W வடிவில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை நாம் ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், குழந்தையின் இடுப்பு சுழற்சியில், தீவிர எலும்பியல் பிரச்சனைகளை உருவாக்கும். மேலும், தசைகள் சிதைவுற்று, சுருங்கி, எலும்புகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது. எனவே பெற்றோர்கள் இதை கண்காணித்து மாற்ற வேண்டும்.

குண்டு குழந்தை

குண்டாக இருக்கும் குழந்தைகள் தான், ஆரோக்கியமான குழந்தைகள் என நினைப்பது தவறு. குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், எடை அதிகரிக்காது. தாய்ப்பால் மட்டும் கொடுத்து, 10 கிலோ எடை இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

2 டம்ளர் போதும்

ரத்த அழுத்தம் சீராக, அதிக உடல் எடையை விரைவில் குறைக்க, வாயுத் தொல்லையிலிருந்து விடுபட, உடலில் இன்சுலின் அளவு சீராக, மலச்சிக்கல் பிரச்சினை இவை அனைத்தும் நீங்க, நாம் தினமும் எழுந்ததும் வெறும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.

வாழை இலையில் சாப்பிடுவது ஏன்?

நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம். வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது எளிதில் செரிமான மடைய உதவுகின்றன.மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சி விடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது. வாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில் நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து, அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன்,  வாழை இலையானது குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.இப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கிய மான வாழ்க்கையை வாழலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு