முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆதம் பாலம்

1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் மனிதன் நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் இது, இந்தியாவில் இருந்து இலங்கை வரை நீண்டு உள்ளது.  இது, இந்து தெய்வம் ராமரால் கட்டபட்டது. இந்த பாலம் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

அனைத்துக்கும் ஒன்றே

பென் டிரைவ் போல வந்துள்ள ரிமோட்டினால் டி.வி, மீடியா பிளேயர், லைட், ஏசி என அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் புது ரிமோட் வந்திருக்கிறது. செவன்ஹக்ஸ் நிறுவனத்தின் படைப்பு தான் இது. இதன் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பொருட்களை இயக்கலாமாம். ஸ்மார்ட் ரிமோட் வைஃபை, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் மூலம் பொருட்களை கட்டுப்படுத்துகிறது.  135 மி.மீ நீளமும், 41 மி.மீ அகலமும் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டோடு, சார்ஜ் பேஸ், 3 ரூம் சென்சார்கள் உட்பட 10 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வாங்கி இஷ்டப்படி பொருட்களை ஒன் மேன் ஆர்மியாக கன்ட்ரோல் செய்து கலக்கலாம்.

குழந்தை வடிவமைப்பு

30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வருங்காலத்தில், தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்களாம். பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம். பின்னர்  இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம். முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும். பின்னர் அதனை வல்லுநர்கள் எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்வர். இதை செய்வதன் மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து  எடுத்து கொள்ள முடியும். இந்த செயல்முறை 30 ஆண்டுகளில் மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் செய்வார்களாம்.

சமையலுக்கு மட்டுமல்ல...

இனு, உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாம். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பதால், கன்னத்தின் அழகு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து உடலை நன்கு தேய்த்து கழுவ சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.

கையில் ஆபத்து

அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைப்பது நல்லது.

ஆயுள் கூடும்

தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்