முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோடையை சமாளிக்க

கோடை காலம் தொடங்கிவிட்டதால் நீர்சத்து இழப்பை தவிர்க்க அதிகளவு நாம் நீர் பருக வேண்டும்.  6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், பணியில் ஈடுபடும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2 லிட்டரும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முதியோர் தினமும் 2 லி தண்ணீரும், நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டுமாம். மேலும், உடல் வெப்பத்தை, உடல் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவைகளை எடுத்துக்கொள்வது நல்லது. மோர் பருகுவதும் நல்ல பலனை அளிக்குமாம்.

எரிமலையில் கொடி

இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார்.  உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

பிக் பெண்ட்

துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா உலகின் உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. தற்போது, சுமார் 1,220 மீட்டர் உயரத்திலான கட்டிடம் ஒன்றை நியூயார்க்கில் வடிவமைக்க உள்ளனர். இதன் உயரத்தை விட மிக பெரிய சாதனை என்னவென்றால், இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு பிக் பெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மற்றொறு கோள்

சூரியக்குடும்பத்தில் இதுவரை 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி அது நீக்கப்பட்டது.  இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருளின் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

இயேசுவின் உருவம்

கிறிஸ்தவர்கள் வணங்கும் புனித கடவுளான இயேசுநாதரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் தெரியாது. புனித நூலான பைபிளிலும் இயேசுநாதரின் உருவ அமைப்புகள்  பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்நிலையில், முதல் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வெண்கல நாணயத்தில் பதியப்பட்டுள்ள உருவம் இயேசுநாதரின் உண்மையான தோற்றம் என இங்கிலாந்து ஆய்வாளர் ரல்பெக்எல்லிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார். எனினும், இதே உருவத்தில் முதல் நூற்றாண்டில் மன்னர் ஒருவர் வாழ்ந்ததாகவும், இது அவரது உருவமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என பிற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்