முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பனி சிகரத்தில் காஸ்ட்லியான ஹோட்டல்

கோடை வாசஸ்தலங்களில் விடுமுறைக்கு செல்பவர்கள் சற்று தள்ளி அமைந்திருக்கும் அமைதியான இடங்களை நாடுவது வழக்கம். ஆனால் ரொம்பவே தள்ளி, பனி சிகரத்தின் மலை உச்சியில் மிகவும் காஸ்ட்லியான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள தெனாலி தேசிய பூங்காவில்தான் அந்த ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு விமானத்தில் செல்வதை தவிர வேறு மார்க்கம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி அதாவது 1829 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. பருவ காலங்களில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை பார்ப்பதற்கே காண கண் கோடி வேண்டும். அதற்கு ஈடாக இந்த ஹோட்டலுக்கு செலவழிக்கவும் காசு கோடி வேண்டும். ஜோடியாக தங்குபவர்களுக்கு 3 இரவுகளுக்கு வெறும் ரூ.26 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பனி சறுக்கு, மலையேற்றம் போன்ற பல்வேறு பொழுது போக்கு  அம்சங்களும் பகலில் உள்ளன. இரவில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை காண்பதே இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பரவச அனுபவமாகும். 

வெயிலை சேமிக்கும் கருவி

குளிர்காலத்திற்குத் தேவையான வெயிலை (சூட்டை) கோடையிலேயே பிடித்து இனி நாம் சேமித்து வைக்க முடியும். உண்மைதான். சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எளிமையாகவும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உள்ளது. இதற்குள் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடு ஊடகம், வெப்பத்தை சேமிக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை வெயில்படும் இடங்களில் வைத்துவிட்டால் தேவையான அளவு வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர்காலத்தின்போது ஒரு பொத்தானை அழுத்தினால் அதில் உள்ள வெப்பம் விடுவிக்கப்பட்டு சுற்றிலும் பரவும்.

மிகவும் பெரியது

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படும், உலகின் மிக ப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்-ஐ, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த நாசா முடிவு செய்துள்ளது. அகசிவப்பு கதிர்களைக் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலை தூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும்.

ஈறு பிரச்சனையா?

நீண்ட நாட்களாக பல் ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது எனவும், சாதாரன ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு இதயக்கோளாறுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது என்றும், மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் இருமுறை பல்துலக்க வேண்டுமாம்.

சூரியனை பார்க்கும் அதிசய முதியவர்

உத்தரபிரதே மாநிலத்தைச் சேர்ந்தவர் 70 வயதான எம்எஸ் வர்மா. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். இடைவிடாமல, கண்களை கொஞ்சம் கூட இமைக்காமல் சூரியனை 1 மணி நேரம் பார்க்கும் திறமை படைத்தவர். நமக்கெல்லாம் வெளிச்சத்தை சிறிது நேரம் உற்று பார்த்தாலே கண்கள் இருட்டி விடும். மனுசன் சூரியனை விடாமல் பார்ப்பாராம். இதற்காக சுமார் 25 ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளார். ஆன்மிக குரு ஒருவரின் மீதான தாக்கம் காரணமாக அவர் கண்களை இதற்கு பழக்கிக் கொண்டதாக தெரிகிறது. சாதனையை கூலாக முடித்துக் கொண்டு ஹாயாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். 

நன்மைகள் பல

பெரிய திரை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிக தகவல்களை ஒரே ஸ்வைப் மூலம் பார்க்க முடியும். இதோடு புகைப்படம், வீடியோ மற்றும் கேம் உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாளலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனம் எனில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago