முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாடகைக்கு ரோபோ

ஜப்பானில் ஒரிக்ஸ் ரென்டெக் கார்ப்ரேஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி எனப்படும் மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் தானாம்.

முதலைகள் குதிரகளைப் பே பாய்ந்து செல்லும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பார்ப்பதற்கு சாதுவாக தோன்றும் முதலைகள். அவை குதிரைகளைப் போலவே வேகமாக நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து செல்லும் திறன் படைத்தவை என்பது உங்களுக்கு தெரியுமா... இது தொடர்பாக 2019 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் மிகவும் அரிதாக முதலைகள் குதிரைகளைப் போலவே நான்கு கால் பாய்ச்சலில் செல்லக் கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு எதுவுமே சாதுவாக இருக்கிறது என எதையும் நாம் தப்பு கணக்கு போட்டு விடக் கூடாது.

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணை தெரியுமா. அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யா நாட்டின் இகதி எனும் சிறிய ஊரில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1 இல்  பிறந்தவர் வங்காரி மாத்தாய். பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலில் இவர் படித்து அமெரிக்காவில் பட்டம் பெற்றார். மேலும் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். நைரோபி பல்கலையில் பேராசிரியரானார். முதல் பெண் பேராசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தனது நாட்டில் இயற்கை வளத்தை காப்பதற்காக பசுமை பட்டை இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்களை நட முயற்சி மேற்கொண்டார். இயற்கை, சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பெண்கள் கல்வி, ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இவரது இயக்கம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இவரது போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவருக்கு கிடைத்த செல்வாக்கால் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகித்தார். இயற்கை வளத்தை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய தடம்

ஜூராசிக் பார்க் என்றழைக்கப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடித் தடங்கள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை 127 முதல் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாம். இதுவரை, 21 வகையான டைனோசர் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சிறுநீரகத்தை பாதுகாக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.  வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம்.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago