முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வழிகாட்டும் வரைபடம்

உலக சுகாதார அமைப்பின் படி உலகில் மொத்தம் 28.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில்தான் அதிக பார்வையற்றோர் இருக்கிறார்களாம். இந்நிலையில் உலகின் முதல் முறையாக பார்வையிழந்தோருக்கென வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை, பார்வையற்றோர் உணர முடியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மொத்தம் 84 பக்கம் கொண்ட வரைபடம் A-3 வகை காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உருவாக்குவதற்கான திட்டப்பணிகள் 1997 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் நிறைவுற்றிருக்கிறது. முதற்கட்டமாக ஆங்கிலம் மட்டுமில்லாமல் பெங்காலி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாறைகளை விழுங்கும் டைனோசர்கள்

டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா?  அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

வீடு கட்டும் விலங்கினம் எது தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

குஞ்சு பொரிப்பதற்கு முன்னால் பறவைகள் கூடுகட்டுகின்றன. அதே போல குட்டி போடுவதற்கு முன்பாக விலங்குகள் ஏதேனும் கூடு அல்லது வீடு கட்டுகின்றனவா.. என்று கேட்டால், ஆம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாலூட்டிகளில் ஒரு விலங்கினம் அவ்வாறு வீடு கட்டுகிறது. குச்சிகள், இலைகள், வைக்கோல்கள், பசுந்தழைகள் ஆகியவற்றை கொண்டு வந்து பஞ்சு பொதி போன்ற வீட்டையும், குட்டிகளுக்கு மெத்தென்ற படுக்கையையும் அந்த விலங்கு தயார் செய்கிறது. அது சினையாக இருக்கும் 3 மாத, 3 வார, 3 நாள் கால கட்டத்தில் அது இவ்வாறான கூடு கட்டும் பணிகளில் ஈடுபடுகிறது. நாம் அந்த விலங்கை தினமும் பார்த்து வந்தாலும் நம் அனைவருக்கும் தெரியாத ரகசியமாக இந்த நடவடிக்கை இருப்பதை அறிந்தால் அது ஆச்சரியம் தானே. அந்த விலங்கு வேறு எதுவும் இல்லை. நாம் அன்றாடம் பார்க்கும் சேற்றில் திளைக்கும் பன்றிதான் அது.

வியக்கவைக்கும் ஐஸ் மனிதர்

நெதர்லாந்தைச் சேர்ந்தவர் விம் ஹோஃப் என்ற 57 வயது நபருக்கு ‘ஐஸ் மனிதர்’ என்ற பெயரும் உண்டு. பனிக் கட்டியில் பல சாதனைகளைப் புரிந்ததால் இவருக்கு இந்த பெயர். ஜப்பான் தொலைக்காட்சி ஒன்றுக்காக ஐஸ் துகள்கள் நிறைந்த தொட்டியில் 2 மணி நேரம் அமர்ந்தும், ஆர்க்டிக் கடலில் ஐஸ்கட்டிகளுக்கு அடியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தும், பின்லாந்தில், பனி நிறைந்த சாலையில் வெறுங்காலில் மராத்தான் ஓடியும் சாதனை படைத்திருக்கிறார். இவ்வாறு பல சாதனைகளை புரிந்து 3 முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். மேலும் 26 சாதனைகளுக்கு சொந்தக்காரர் இவர்.

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago