முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

வாட்ஸ் அப் அப்டேட்

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது வீடியோ கால் திரையை சிறிதாக்கி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவேற்றம் செய்யும் வசதியை கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த ஸ்டேட்டஸ்களில் டெக்ஸ்ட் செய்து பகிர்ந்து கொள்ளும் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மை, India Ink

சீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black) புகைக்கரி (பைன் மர துண்டுகளை) எரித்து கிடைக்கப்பெற்றது), இறைச்சி கொழுப்பு (விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட Gelatin Bone Clue), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும்  சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய எழுதுவதற்கான திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும். உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா 'இந்தியா இங்க்" (India Ink). சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா... மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.

இயற்கை வழி

முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

தேனின் மகத்துவம்

நல்ல தேனை கண்டுப்பிடிக்க, ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. அதேபோல், சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பிக்கும் போது சுடர்விட்டு எரிந்தால் அது சுத்தமானது.

நினைப்பதை டைப் செய்யும்

தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாமல் தவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளனர். இதற்காக மின்சார தாக்குதலால் கை- கால் செயலிழந்த மற்றும் வாய் பேச முடியாத ஒருவரை வைத்து ஆராய்ந்ததில் அவர் மனதில் ஏற்படும் உணர்வை கம்ப்யூட்டர் கிரகித்து அதை டைப் செய்கிறது. இந்த கருவியை தலையின் மேல் பகுதியில் பொருத்திக்கொண்டால் போதும். அது, மூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாக கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது. இது பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago