முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

4 செமீ அகலமே கொண்ட உலகின் மிகவும் ஒல்லியான நதி

உலகின் மிகப் பெரிய நதி அமேசான். இது பல கண்டங்களை கடந்து செல்கிறது.  அதன் அகலம் மட்டும் சுமார் 6 மைல்கள். மழைக்காலங்களில் சில சமயம் 24 மைல்கள் வரை அகன்று பரந்து விரிந்திருக்கும். ஆனால் அதற்கு எதிர்மாறாக உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி எங்கே ஓடுகிறது தெரியுமா? சீனாவில். சீனாவின் வடக்கு பகுதியில் உள்புற மங்கோலியாவில் ஓடும் ஹூவாலாய் நதிதான் உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி. சுமார் 17 கிமீக்கும் அதிகமான தொலைவை கடந்து செல்லும் இந்த நதியின் அகலம் வெறும் 15 செமீ. ஒரு சில இடங்களில் இதன் அகலம் வெறும் 4 செமீ. ஒரே எட்டில் நாம் அதை தாண்டி விடலாம். ஒல்லியாக இருப்பதால் அது மற்ற நதிகளை காட்டிலும் ஓட்டத்திலும், பாய்ச்சலிலும் எந்த குறைவும் இல்லை என்பது ஆச்சரியம் தானே.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக வயது கொண்டவர் வாழ்ந்த நாடு

உலகிலேயே அதிக வயது கொண்ட மூதாட்டி வாழ்ந்த நாடு பிரான்ஸ்தான். ஜெனே லூயி கால்மென்ட் என்ற மூதாட்டி 1872 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 122 வயது வரை வாழ்ந்தார். 1997 இ்ல் மறைந்தார். அதிகாரப்பூர்வமாக அதிக வயது வரை வாழ்ந்தவர் என்ற ஆவணப்படுத்தப்பட்டது இவரது வாழ்வாகும். மேலும் பிரான்சில் மக்களின் சராசரி ஆயுள் காலம் மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம்். 2018 நிலவரப்படி சராசரி ஆயுள் பெண்களுக்கு 85.3 ஆண்டுகள், ஆண்களுக்கு 79.4 ஆண்டுகள். அதிக ஆயுள் கொண்ட மனிதர்கள் பட்டியலில் பிரான்ஸ் உலகில் 14 ஆவது இடத்தில் உள்ளது.

முக பொலிவுக்கு ....

வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் பெண்களின் முகம் ஜொலிக்கும்.

யூதர்களின் அடையாளம்

இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் யூத மத அடையாளமான ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டு 8.5 லட்சம் டாலர்களுக்கு அமெரிக்காவில் ஏலம் போனது. இக்கல்வெட்டை ஏலம் எடுத்தவர் அருங்காட்சியகம் வைக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago