முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் கருவி

வயலின் என்பதும் அழகிய இசைக்கருவி. இளையராஜா பாட்டை கேட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த இசைக்கருவியின் அற்புதம் எப்படி என... இந்நிலையில் உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் இசைக்கருவி எது தெரியுமா.. லேடி ப்ளூன்ட் ஸ்ட்ராடிவேரியஸ் என்பவர் 1721 ஆம் ஆண்டு உருவாக்கிய வயலின் கருவிதான் அதிக விலைக்கு போனது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது இந்த வயலின் இசைக்கருவி சுமார் 121 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த ஆன் லைன் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இசைக் கருவிகளில் அதிக விலைக்கு விற்ற சாதனையை இது படைத்துள்ளது.

புதிய உணவகம்

லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பால் காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார்.

நீந்தி திரியும் வண்ண மீன்களுக்கு மத்தியில் அமர்ந்து சாப்பிடும் உணவகம்

கலர் கலராக வண்ண மீன்கள் காலுக்கு அடியில் சுற்றித் திரிய அதன் மத்தியில் மேஜை நாற்காலி போட்டு சாப்பிடும் அழகிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா.. தாய்லாந்தில் உள்ள ஹோசிமின் நகரில்தான் இப்படி ஓர் அழகிய அனுபவத்தை அளிக்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் கால் பாதம் வரை நிரம்பியிருக்கும் ஹால் ஒன்றில் அழகிய கலர் கலர் மீன்கள் நீந்தி விடப்பட்டிருக்கும் அவற்றின் நடுவில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து உணவருந்துவது மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

அதிவேக போலீஸ் கார்

புகாட்டி வேரோன் ரகக் கார், மணிக்கு 407 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 2.5 விநாடிகளில் 97 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் இந்தக் காரின் விலை 10 கோடியே 41 லட்ச ரூபாய். இந்த கார் துபாய் போலீஸ் பிரிவில் இணைக்கப்பட்டதன் மூலம், அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள முதல் நாடு என்ற சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.

பணமே இல்லையாம்

சிங்கப்பூரில் 61 சதவீதத்தினரும், நெதர்லாந்தில் 60 சதவீதத்தினரும், பிரான்ஸில் 59 சதவீத மக்களும்,  ஜெர்மனியில் 33 சதவீதத்தினரும், ஆஸ்திரேலியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்து கின்றனர். எனவே மேலே கூறியுள்ள நாட்டிற்குச் செல்லும் போது ரூபாய் நோட்டுகள் பற்றி கவலைப்படாமல் சென்று வரலாம்.

பால் ஏன் வெள்ளையாக உள்ளது?

பால் 87 சதவீதம் நிறமற்ற நீரைக் கொண்டிருந்தாலும் வெள்ளை நிறத்தில்தான் காணப்படுகிறது. இது ஏன் தெரியுமா.. பாலில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாலில் உள்ள புரதங்களின் முக்கிய வகைகளில் ஒன்று கேசின்கள் ஆகும். அவை கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுடன் சிறிய கொத்தாக சேர்ந்து மைக்கேல்ஸ் எனப்படும் சிறிய துகள்களை உருவாக்குகின்றன. இந்த சிறிய துகள்களைத ஒளி தாக்கும்போது அது ஒளி விலகல் ஏற்பட்டு அதை சிதறச் செய்கிறது. பால் அனைத்து ஒளி அலைநீளங்களையும் பிரதிபலிக்கிறது. எதையும் உறிஞ்சாது. இதனால் பால் வெள்ளை நிறமாக தோன்றுகிறது. எல்லா பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் காரணமாக பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் காரணமாக சில வேளைகளில் மஞ்சள் நிறத்தையும் பிரதிபலிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago