முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேசிய கீதம்

கடும் உழைப்புக்கு பிரபலமான நாடு ஜப்பான். உலகின் பழமையான தேசிய கீதத்தை கொண்ட நாடும் அதுதான். உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதத்தை கொண்ட நாடும் ஜப்பான்தான். அதன் தேசிய கீதத்தில் இருப்பது ஐந்தே வரிகள், வெறும் 31 எழுத்துக்கள். 13 அடிகள் கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பது மரபு.

ஆய்வாளர்களின் விருப்பம்

ஹரியானாவில் உள்ள ராக்கிகர்ஹி ஓவுறு தொல்பொருள் ஆய்வாளர்களின் கனவாகும். இதை 1963-ம் ஆண்டு சிந்து சமவெளியில் மிக பெரிய நகரம் என கண்டுபிடித்தனர். மொஹெஞ்சோடரோ மற்றும் ஹாரப்பாவில் உள்ள தளங்களைவிட இது பெரிது என்று கூறப்படுகிறது. தற்போது அதில் இருந்த பொக்கிஷங்கள் களவாடப்பட்டுள்ளன.

பூமிக்கடியில் நகரம்

இங்கிலாந்தின் பர்லிங்டன் நகரம், 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 1950 களின் இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதிகாரிகள், ஊழியர்களைக் காப்பதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டது.

கோமுக ஆசனம்

கோமுக ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்.பசுவின் முகத்தைப் போன்று தோற்றம் அளிப்பதால், இந்த ஆசனம் இந்த பெயர் பெற்றது. இதை செய்தால் உடல், மனதிற்கு அமைதியைக் கொடுக்கும். சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்யும். முதுகு, இடுப்புக் கூடு, நரம்பு வாதம், கீல் வாதத்திற்கு நல்ல தீர்வு. ழுத்து தோலின் இறுக்கம் நீங்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

சஹாராவில் மக்கள்

உலகின் மிகவும் வறண்ட நிலமான பாலைவன பூமி சஹாரா. உலகில் சஹாரா பாலைவனம் மூன்றாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,200,000 சதுர கிலோமீட்டர்கள். கடந்த 100 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் 10% வளர்ச்சியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். சஹாராவில் மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? சுமார் 2.5 மில்லியன் மக்கள் சஹாராவை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். இவர்கள் இங்கு நாடோடிகளாக வாழ்கின்றனர். ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சுற்றிலும் பாலைவனத்தைச் சுற்றி நகர்கிறார்கள். பருவ மாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்கை வளங்களுக்கு அருகில் கூடாரங்கள் அடித்து முகாம்களை உருவாக்குகிறார்கள். சஹாரா வறண்டது என்ற போதிலும் இரவில் வெப்பநிலை வியக்கும் அளவில் குறைகிறது. வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும். பல மலைத்தொடர்களில் பனி தவறாமல் விழுகிறது. சஹாரா பாலைவனத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள ஒரே நன்னீர் ஏரி சாட் ஏரி. இங்கு 1960கள் வரையிலும் கூட சிங்கங்கள் வாழ்ந்தன. அவை பாலைவனத்தின் வறட்சியால் அழியவில்லை. மனிதர்களின் வேட்டையினாலேயே அவை முற்றிலும் அழிந்து போயின என்பது மிகுந்த சோகம்தானே.

நிஜமாக நெருப்பை கக்கும் 3 தலை டிராகன் சிலை

ரஷ்யாவில் உள்ள Lipetsk பிராந்தியத்தில் அமைந்திருக்கும் கிராமம் Kamenka. தற்போது இந்த கிராமம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்குள்ள குடிகின கோரா என்ற பேமிலி பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் சிலைதான் தற்போது டூரிஸ்ட் அட்ராக்சனாக உள்ளது. அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. ஸ்லோவாக்கிய நாட்டுப்புற கதைகளில் காணப்படும் ஒரு வகை வில்லத்தனமான விலங்கு Zmei Gorynich. இதை தமிழில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நெருப்பை கக்கும் 3 தலை கொண்ட டிராகன் என்று சொல்லலாம். மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிலை காண்பவர்களை மிரட்டும் வகையில் நிஜமாகவே நெருப்பை கக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உக்ரேன் சிற்பி Vladimir Kolesnikov தான் அந்த சிலையை வடிவமைத்தவர் என்பது கூடுதல் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago