முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மட்டர் பன்னீர் மசாலா

Cooking time in minutes: 
20
Ingredients: 

மட்டர் பன்னீர் மசாலா செய்யத் தேவையான பொருள்கள்;

பன்னிர் - ஒரு கப்.

தக்காளி - 6.

முந்திரி பருப்பு - 10.

பூசணி விதை - 3 ஸ்பூன். 

சீரகம் - 1/2 ஸ்பூன். 

பொடியா நறுக்கிய பச்சை மிளகாய் - 2.

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன். 

சீரகத்தூள் - ஒரு ஸ்பூன். 

மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன். 

மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.

கரம்மசாலா - 1/2 ஸ்பூன். 

பச்சை பட்டானி - ஒரு கப். 

கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன். 

பொடியா நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.

உப்பு - தேவையான அளவு.

Method: 

செய்முறை ;

  1. மிஸ்சி ஜாரில் பொடியாக நறுக்கிய 6 தக்காளியை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. மிஸ்சி ஜாரில் 10 முந்திரி பருப்பு,3 ஸ்பூன் பூசணி விதை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன்,1/2 ஸ்பூன் சீரகம்,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்,1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் மிக்சியில அரைத்த  முந்திரி பருப்பு,பூசணி விதை விழுதை போட்டு கிளறிவிடவும்.
  4. இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலா போட்டு கிளறிவிடவும்.
  5. இதனுடன் மிக்சியில அரைத்த தக்காளி விழுது,ஒரு கப் பச்சை பட்டானி,தேவையான அளவு உப்பு,சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேக விடவும்.
  6. 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி,ஒரு கப் பன்னீர்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு போட்டு கிளறிவிடவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான மட்டர் பன்னீர் மசாலா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago