முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழை இலை மீன் வறுவல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

வாழை இலை மீன் வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;

 

  1. மீன் - 1 கிலோ.
  2. மிளகாய் தூள் - 50 கிராம்.
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  4. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
  5. மிளகு தூள் - 1 ஸ்பூன்.
  6. சோள மாவு - 2 ஸ்பூன்.
  7. வாழை இலை - 1.
  8. கிராம்பு – 6.
  9. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. 1 கிலோ மீனை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. மீனை வைத்து மடக்கி வைக்கும் அளவுக்கு வாழை இலையை வெட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், மிளகு தூள் 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், மிளகாய் தூள் 50 கிராம், சோள மாவு 2 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு  போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. மசாலா கலவையை எடுத்து மீன்துண்டின் அணைத்து பகுதிகளிலும் படும்படி நன்றாக தடவி விடவும்.
  5. இதனை தயார் செய்து வைத்துள்ள ஒரு வாழை இலையில் வைத்து ஒரு கிராம்பை குத்தி வைக்கவும்.
  6. எல்லா மீன்களையும் இது போல் செய்து வைத்துக்கொள்ளவும்
  7. அடுப்பில் கடாய் வைத்து  மீன்களை வாழை இலையுடன் வைத்து 2 நிமிடம் வேக விடவும்.
  8. எண்ணெய் ஊற்ற வேண்டியது இல்லை, திருப்பி திருப்பி போட்டு 5  நிமிடம் குறைவான தணலில் நன்றாக வேக விடவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்
  10. சுவையான வாழை இலை மீன் வறுவல் ரெடி

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்