முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு விவகாரகத்தில் பாராளுமன்றத்தில் தமிழகம், மேற்குவங்க மாநில எம்.பி.க்கள் அமளி

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக  மாநிலங்களவையில் தமிழகம், மேற்குவங்க மாநில எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசினர்.

மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், "நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டு பின்னர் தேர்வை அமல் படுத்துங்கள்" என்றார்.

அதேபோல், மேற்குவங்க எம்.பி. டெரக் ஓ பிரெயின் பேசும்போது, "தமிழ் மற்றும் வங்க மொழிகளில் தயார் செய்யப்பட்ட நீட் வினாத்தாள் மற்ற மாநிலங்களுக்காக தயார் செய்யப்பட்டதைவிட மிகவும் வித்தியாசமாக இருந்தது. நீட் தேர்வால் தமிழகமும், மேற்குவங்கமுமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியவாறு தமிழக, மேற்குவங்க எம்.பி.க்கள் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய சுகாதார அமைசர் ஜெ.பி.நட்டா நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து