முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி முதல் நாளே உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை: ரூ.55 ஆயிரத்தை தாண்டியது

புதன்கிழமை, 17 ஜூலை 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 அதிகரித்த நிலையில், ஆடி முதல் நாளான நேற்று (புதன்கிழமை) (ஜூலை 17) மீண்டும் பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.6,830-க்கும், ஒரு பவுன் ரூ.360 அதிகரித்து ரூ.54,640-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், ஆடி மாதம் முதல் நாளிலே அதிரடியாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 அதிகரித்து தங்க நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, புதன்கிழமை( ஜூலை 17) கிராம் ரூ.90 அதிகரித்து ரூ.6,920-க்கும், ஒரு பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கும் விற்பனையானது. இதேபோன்று வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.99.70-க்கும், செவ்வாய்க்கிழமை 20 காசு குறைந்து ரூ.99.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 குறைந்து ரூ.99,500-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,00,500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து