முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை கடந்து செல்லும் டிசி4 விண்கல்லால் ஆபத்து இல்லை

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் 'டிசி4' என்ற விண்கல், பூமியை வியாழக்கிழமை கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் 'டிசி4' என்ற விண்கல், பூமியை வியாழக்கிழமை கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பூமியிலிருந்து சுமார் 42,000 கி.மீ. தொலைவு வரை வந்து செல்லவிருக்கும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சுமார் 50 முதல் 100 அடி வரை அகலம் கொண்ட விண்கல் ஒன்று, விண்வெளியில் சுற்றிவருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். டிசி4 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல், 2012-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம், 12-ஆம் தேதி அன்டார்டிகா கண்டத்துக்கு மிக நெருக்கத்தில் கடந்து சென்றது.

இந்த நிலையில், அந்த விண்கல் மீண்டும் 2017-ஆம் ஆண்டு பூமியை நெருங்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துக் கூறியிருந்தனர். அதன்படி, டிசி4 விண்கல் பூமியை வியாழக்கிழை மிக நெருக்கத்தில் கடந்து செல்கிறது. எனினும், 42,000 கி.மீ. தொலைவிலேயே அந்த விண்கல் பூமியைக் கடந்துவிடுவதால், அது பூமியுடன் மோதும் ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும், விண்கற்களால் பூமிக்கு ஆபத்து நேரிடும் சூழலில், அதனைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள் மற்றும் அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, இந்த டிசி4 விண்கல்லின் வருகை உதவும் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து