முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா: ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் தீபா

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Deepa 20221 02 02

Source: provided

சென்னை: மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அழைப்பிதழ் கொடுத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வைக்க அவர் திட்டமிட்டார். அவ்விழாவிற்கு முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு கணவர் மாதவனுடன் தீபா சென்றார். பின்னர் மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி ஓ. பன்னீர் செல்வத்திற்கு  அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து