முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்தியர் தேர்வு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      உலகம்
Richard-Rahul 2023 04 01

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை  சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் வெளியுறவு துறையின் மேலாண்மை மற்றும் வளத்துறையின் துணை அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மாவை அதிபர் ஜோபைடன் கடந்தாண்டு டிசம்பரில் நியமித்தார். 

இந்நிலையில், செனட் சபையில் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் 67 வாக்குகளை பெற்று ரிச்சர்டு தேர்வானார். இதன் மூலம், அமெரிக்க வெளியுறவுத் துறையின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் இந்திய வம்சாவளி  என்ற பெருமையை ரிச்சர்ட் வர்மா பெற்றுள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் சர்வதேச பொது கொள்கைக்கான தலைமை சட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முன்னதாக, கடந்த 2015-17ம் ஆண்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து