முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைசூரில் இளைஞர் தசரா விழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு பணியில் 1,239 போலீசார்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Mysore 2024-10-05

Source: provided

 மைசூரு : மைசூரில் இளைஞர் தசரா இன்று துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  

ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசராவின்போது, இளைஞர் தசரா நடக்கும். இந்த தசரா இளைஞர்கள் திறமையை வெளிப்படுத்தும், ஒரு மேடையாக பார்க்கப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று, ஆண்டுதோறும் இளைஞர் தசரா களைகட்டும். 

ஒவ்வொரு ஆண்டும் மகாராஜா கல்லுாரி மைதானத்தில் தான், இளைஞர் தசரா நடந்து வந்தது.  ஆனால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், இந்த ஆண்டு இடம் மாற்றப்பட்டு உள்ளது. சாமுண்டி மலை பின்பக்கம் இருக்கும், உத்தனஹள்ளி மாரியம்மன் கோவில் அருகே உள்ள, மைதானத்தில் இளைஞர் தசரா கொண்டாடப்பட இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து, மைசூரு எஸ்.பி., விஷ்ணுவர்த்தன்  நிருபர்களிடம் கூறுகையில், 

 மைசூரு இளைஞர் தசரா விழா இன்று 6-ம் தேதி துவங்கி, வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது. சாமுண்டி மலை பின்பக்கம் வனப்பகுதி அருகே நிகழ்ச்சி நடப்பதால், தேவையின்றி யாரும் வனப்பகுதிக்குள் செல்ல கூடாது.  

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்வோருக்கு, எந்த தொந்தரவும் ஏற்படாமல் இருக்க, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து, மெயின் ரோடு வரை மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

நகர, சென்ட்ரல் பஸ் நிலையங்களில் இருந்து, இளைஞர் தசரா நடக்கும் இடத்திற்கு, பஸ் அடிக்கடி இயக்கப்படுகிறது. சக்தி திட்டத்தின் கீழ் பெண்கள் பயணம் செய்யலாம்.  தினமும் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. 

பாஸ் வாங்கியவர்கள் அமர்ந்து பார்க்க 5,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதி என்பதால் இடத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள, மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து