எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளை காண பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு இன்று 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8:00 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளது.
அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக் கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், அதே போல், டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


