முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Jaishankar 2023 06 08

Source: provided

புதுடெல்லி : வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். 

ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரே கடந்த காலங்களில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். வரும் 15 மற்றும் 16-ம்  தேதிகளில் அவர் பாகிஸ்தானில் தங்கியிருக்க உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. 

காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து