முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, 2017-ம் ஆண்டு கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக வார்டு மறுவரையறை செய்து அரசாணை வெளியிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்து விட்டார்கள். அதற்கு பின் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் போது வார்டு மறுவரையறை செய்வதற்காக முயற்சி மேற்கொண்டது, அப்போது போதிய கால அவகாசம் இல்லாததால் மறுவரையறை செய்ய முடியவில்லை. 

வார்டு மறுவரையறை செய்யும் போது 110 நாட்கள் அவகாசம் கொடுத்து பொதுமக்களின் கருத்து கேட்க வேண்டும். அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய காலத்திற்குள் இவையெல்லாம் செய்ய முடியாது என்பதால் வார்டு மறுவரையறை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  எனவே, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டு மறுவரையறை செய்வதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெற்று குழு அமைக்க உள்ளோம்.

இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் நடைபெறும்.  தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும்.   அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அரசு அமைத்து இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து