முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாட்டோம்: சிதம்பரம் கோவில் தொடர்பான வழக்கில் பொது தீட்சிதர்கள் உறுதி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      ஆன்மிகம்
Nellaiappar-Thirukalyana-fe

Source: provided

சென்னை : சிதம்பரம் கோவில் கட்டுமானம் தொடர்பான வழக்கு - பொது தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு கேள்வி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொது தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் பொது தீட்சிதர்கள் கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும், இந்த கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது என பொது தீட்சிதர்களுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து சிதம்பரம் கோவிலில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொது தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறநிலையத்துறை ஆணையரின் மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது தீட்சிதர்கள் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து