முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் : சென்னை காவல்துறை அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
Shankar-Jiwal 2023 06 24

Source: provided

சென்னை : 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை காரணமாக புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, வரும் 5-ம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும். இந்த புயல் சின்னத்திற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரைபொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து