முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Teacher 2023-05-16

Source: provided

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

தொடக்க கல்வித் துறை மற்றும் அதை சார்ந்த பணிகளில் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஏற்பட்ட வட்டார கல்வி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு, நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற தகுதியுள்ள நபர்களுக்கு இன்று 4-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து