முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல் பாதிப்பு: காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      இந்தியா
Rahul-Gandhi 2023 03 30

Source: provided

புதுடெல்லி : மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரவலாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டிருக்கிறது. கனமழையால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன். தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து