முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளச்சேரியில் மீட்புப்பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். 

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

கனமழையின் காரணமாக தென் சென்னை பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 43 செ.மீ. மழைப்பொழிவு பதிவான நிலையில், அங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சூழலில் வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில், பைபர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து