முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜம் புயலால் கடும் பாதிப்பு: சென்னை மக்கள் பாதுகாப்பாக இருக்க வார்னர் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      விளையாட்டு
Warner 2023-09-10

Source: provided

சென்னை : கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை மக்களுக்கு பிரபல ஆஸ்திரேலிய  வீரர் டேவிட் வார்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதி கனமழை... 

`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

பாதுகாப்பாக... 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.

பரிசீலிக்கவும்...

தேவைப்பட்டால் உயரமான இடத்தில் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால், நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதையோ பரிசீலிக்கவும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம். இவ்வாறு வார்னர் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து