எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக ஓடுபாதையில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்ட பிறகு விமான சேவை தொடங்கிய நிலையில் போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாத விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
மேலும் அடையாறு ஆற்று வெள்ளநீர் விமான ஓடுபாதையில் தேங்கியது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நேற்று முன்தினம் காலை 9 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.
பின்னர் ஓடுபாதையில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்ட பின் 9 மணிக்கு மேல் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமான விமான சேவைகள் தொடங்கிய போதிலும், போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், போதிய பயணிகள் இல்லாததாலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள்,11 வருகை விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 விமானங்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |