முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அண்ணாமலை ஆய்வு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Annamalai 2023-10-17

Source: provided

சென்னை : சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் ஆய்வு செய்தார். 

வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியில் இருந்து பகுதிகளில் தனது ஆய்வை தொடங்கிய அவர்,  அங்கு வீடுகளில் இருந்த பொதுமக்களிடம் அவர்களுக்கு தேவையான உதவிகள், ஒவ்வொரு மழை காலமும் இப்படித்தான் மழை தண்ணீர் தேங்குகிறதா? இதற்கான காரணம் என்ன? அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கிறதா? என்பதையெல்லாம் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார். 

தொடர்ந்து மேற்கு சைதாப்பேட்டை, விநாயகபுரம், ஆயிரம்விளக்கு, ராயபுரம், சின்னமாத்தூர் ஆகிய பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.  அதன் பிறகு பொதுமக்கள் கூறிய கருத்துக்கள், தண்ணீர் தேங்குவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிக்கை மூலம் வெளியிடுவதாக தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தென்சென்னை மாவட்ட தலைவர் சாய் சத்யன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து