முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Gopala-Sundararaj 2023-12-0

Source: provided

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு செயலாளரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ். அறிவித்துள்ளார். 

முன்னதாக உமா மகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆக இருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார். கோபால சுந்தரராஜ் ஐ.ஏ.எஸ், வணிக வரித்துறை இணை இயக்குநர், தென்காசி கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், கீழக்கரை அருகே மாவிலை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால சுந்தரராஜ். தமிழ் வழியில் கல்வியை முடித்தவர். ராஜஸ்தானில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய அவர், குடிமைப் பணியின் மீது ஆர்வம் கொண்டு, பணியைத் துறந்தார். 

தன்னுடைய மூன்றாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 5-ம் இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து