முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      உலகம்
Singapore 2023-12-09

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும். 

இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து