முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      விளையாட்டு
de-Villiers 2023 08 18

Source: provided

அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது., நான் எனது கண்ணில் அடிபட்ட விஷயத்தை சாதரணாமகவே கூறினேன். நான்  சாதரணமாக கூறிய விஷயம் தலைப்புச் செய்தியாகிவிடாது என நம்புகிறேன். நான் கூறியது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். எனது இளைய மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது மூத்த மகன் எனது வலது கண்ணில் உதைத்துவிட்டான். அப்போது அந்த சம்பவம் குறித்து நான் பெரிதாக யோசிக்கவில்லை. 

கண்ணில் எனது மகன் உதைத்தவுடன் நான் அதிர்ச்சியில் கண்ணை கையால் மூடிக் கொண்டேன். எனது கண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது என பயந்தேன். அதன்பின் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். பிறகு ஐபிஎல் தொடர்களில் கடந்த 2-3 ஆண்டுகளாக விளையாடும்போது எனது வலது கண் பார்வை மங்கலாக இருப்பதை உணர்ந்தேன். அதன்பின் கண் மருந்து  எடுத்துக் கொண்டேன். எனது இடது கண் நன்றாக இருந்ததால் என்னால் கிரிக்கெட் விளையாட முடிந்தது என்றார்.

 

______________

இன்னும் பயிற்சி தேவை: ரிங்கு

இந்திய அணி  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும்  2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் டி20 தொடர் இன்று (டிசம்பர் 10) தொடங்குகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் தென்னாப்பிரிக்காவின் ஆடுகளத்தில் இன்று பேட் செய்தேன். பந்தின் வேகம் அதிகமாக உள்ளது. அதேபோல பந்துகள் அதிக அளவில் பௌன்சர்களாக வருகின்றன. இந்த ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் என்னுடைய முதல் பயிற்சியில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ராகுல் டிராவிட் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு அறிவுரை கூறினார்என்றார்.

______________

தென் ஆப்பிரிக்க வீரர் விலகல்

 இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று (டிசம்பர் 10) தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவரது உடல்நிலை குறித்து  தென்னாப்பிரிக்க அணியின் மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.______________

தொடரை சமன் செய்த நியூசி.,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து வங்காளதேசம் வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களும், தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 180 ரன்களும் எடுத்தன.

இதையடுத்து 8 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு அனைத்து விக்கெட்டையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 39.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

______________

ஆஸி., அணிக்கு புதிய கேப்டன்

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மெக் லானிங் கடந்த மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 31 வயதான மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்காக 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் மெக் லானிங் ஓய்வு பெற்றதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் ( டெஸ்ட், ஒருநாள், டி20) கேப்டனாக அலிசா ஹீலி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஹ்லியா மெக்ராத் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து