முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து: 15 பேர் பலி

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      உலகம்
China 2023-02-24

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக பலியானார்கள். 

சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர்.

இந்த தீ விபத்தில் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 44 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் தீயில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீ விபத்து குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து