முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 5 மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது காங்.-ஆம் ஆத்மி

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      இந்தியா
congress-office

Source: provided

காந்திநகர் : வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு குஜராத், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி  இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இன்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சி, இன்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், 24 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பரூச் மற்றும் பாவ்நகர் ஆகிய 2 தொகுதிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில், காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. குருக்ஷேத்ரா தொகுதி மட்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சண்டிகரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட உள்ளார். அதேபோல் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. இதன்மூலம் குஜராத், ஹரியானா, டெல்லி, கோவா, சண்டிகர் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையிலான தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து