முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்ச்சல் காரணமாக போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      உலகம்
Pope-Francis 2023 04 02

Source: provided

ரோம் : போப் பிரான்சிஸ் (87) லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல் காரணமாக போப் பிரான்சிஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது அன்றாட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிறிஸ்தவர்கள் ஆறுதல் அடைந்துள்ளதோடு விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிசுக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து