முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயில்: மக்கள் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      இந்தியா
Trin 2023-02-25

Source: provided

ஜம்மு : காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ஓட்டுனர் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயிலை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6-7 மணியளவில் சரக்கு ரெயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டது. கதுவாவிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பிறகு,  சரக்கு ரெயில் பஞ்சாபின் கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சியை அடைந்ததாக கூறப்படுகிறது. 

அங்கு சரக்கு ரெயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஜம்மு ரெயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து